"மீனாட்சி கோவில்" - மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

x

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் 2025 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்லூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான 63 பணிகளில் 40 பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக கூறினார். மேலும், வீர வசுந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்