124கிமீ புயலால் 1,000 மரணம்..பிணக்காடான இந்திய பெருங்கடல் பகுதி..உலக மேப்பில் சுவடின்றி அழிந்த நகரம்
மாயோட் தீவில், புயல் மழையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பெருங்கடலில், மடகாஸ்கர் அருகே உள்ள மாயோட் தீவு, பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தீவை, நேற்று புயல் தாக்கியது. இதனால், மணிக்கு 124 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகள், மின் கம்பங்கங்கள், மரங்கள் உள்ளிட்டவை பலத்தை சேதங்களை சந்தித்தன. இதனிடைய, புயல் மழையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே, புயலுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
Next Story