ஒரு ஊரையே களேபரமாக்கிய சிலை..பறந்து வந்த அதிகாரி.. மயிலாடுதுறை அருகே பரபரப்பு

x

கிளியனூர் மெயின்ரோட்டில் ஓமக்குளம் உள்ளது. இக்குளத்தின் கரையில் பழங்காலத்தில் அரசமரம் மற்றும் விநாயகர் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அரசமரம் வெட்டப்பட்ட நிலையில், அந்த இடத்தில் அதில் இஸ்லாமியர் ஒருவர் கறிக்கடை நடத்திவருகிறார். இப்பகுதியில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சின்னபள்ளிவாசல் ஜமாத் சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பழங்காலத்தில் விநாயகர் சிலை இருந்த இடம் அதில் மீண்டும் விநாயகர் கோயில் அமைக்க வேண்டுமென்று அந்த கிராமத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குளக்கரையில் அரை அடி உயர விநாயகர் சிலை ஒன்றை அப்பகுதி மக்கள் புதிதாக பிரதிஷ்டை செய்தனர்.

இதை அறிந்த ஜமாத்தார்கள் அந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்த போலீசார், வருவாய்த்துறையினர்

சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து பேசினர். இதுகுறித்து ஆர்டிஓ தலைமையில் 10 நாட்களில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்றும், அதுவரையில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருசமூகத்தினரும் பிரவேசிக்க கூடாது என்று வருவாய்த்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்