பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை..! வீடியோ எடுத்து மிரட்டும் காதலன்.. கதறும் பாதிக்கப்பட்ட பெண்கள்

x

மயிலாடுதுறை அருகே திருமணமான பெண்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி மயக்கி, பணம் நகையை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Vovt

குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் ஹூசைன். இவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி 14 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக 28 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்து, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியில் சொன்னால், போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கர்ப்பம் ஆனதை, ஜாகிர் ஹூசைனின் குடும்பத்தினர், கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து கலைத்த‌தாகும் புகாரில் கூறியுள்ளார். இதே போன்று, ஜாகிர் ஹூசைனின் உறவுக்கார பெண்ணும் பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த பெண் மீதே குற்றம் சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், ஜாகிர் ஹூசைன் மீது 5 பிரிவுகள் கீழ் வழ‌க்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போராட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்