வெள்ளி ரதம் வெள்ளோட்டம் - தேரை வடம் பிடித்து திரளான பக்தர்கள்

x

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், அமிர்தகடேஸ்வரர் கோவிலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீனத்தின் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். வெள்ளி தேரில் அபிராமி அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்று, கோவில் பிரகாரத்தை வலம் வந்து தேர் நிலையை சென்றடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்