விடிய விடிய கொட்டித்தீர்த்த பேய் மழை - மக்கள் கடும் அவதி | Mayiladuthurai | Rainfall
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடிய விடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில் , பழையார் திருமுல்லைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கி, பின்னர் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். இதனிடையே, சீர்காழியில் 136 மில்லிமீட்டரும், கொள்ளிடத்தில் 134 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Next Story