கொலையாளியின் வீடு சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்ட பயங்கரம்.. அச்சத்தில் கிராமம்

x

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதலில், எதிர் தரப்பினரின் வீடுகளை கும்பல் அடுத்தடுத்து சூறையாடி பொருள்களை திருடி செல்வதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகேயுள்ள சாக்கியம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் நீடூர் ஆலங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கதிர் என்பவருடன் முன்விரோதம் காரணமாக தகராறு செய்திருக்கிறார். இதில், கதிர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ராம்குமார் படுகாயமடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கதிர், அவரது தந்தை மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட ராம்குமாரின் தரப்பினர், எதிர் தரப்பின் வீட்டை சூறையாடி தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர் வீடுகள் அடுத்தடுத்து சூறையாடப்பட்டு.. வீட்டில் இருந்த பொருள்கள் திருடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் ஆலங்குடியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரை கைது செய்திருக்கும் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்