விபத்தில் சிக்கிய கால்பந்தாட்ட வீராங்கனை - முதல்வரிடம் கோரிக்கை வைத்த பெற்றோர்,கிராம மக்கள்

x

தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் கால்பந்தாட்ட வீராங்கனைக்கு நிதி உதவி கேட்டு, கிராம மக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி விக்டர்ராஜம். இவரது மகள்களான, பியூலா ஹான்சி, பியூலா நான்சி, மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ் ஆகிய மூவரும், மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளவிருந்தனர். இந்த நிலையில், கடந்த 20ம் தேதி பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அரசு பேருந்து மோதி பியுலா நான்சி மற்றும் அந்தோணி விக்ராந்த் இருவரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் தப்பிய, பியூலா ஹான்சிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காயங்களுடன் தப்பிய கால்பந்தாட்ட வீராங்கனையின் சிகிச்சைக்கும், படிப்பிற்கும் நிதி உதவி கேட்டு பெற்றோர்கள் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முதலமைச்சரிடம் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்