வெடித்து சிதறிய சிலிண்டர்.. மனைவியின் மடியில் தலை வைத்து உயிரை விட்ட கணவன்
மயிலாடுதுறை அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், மனைவி உயிரிழந்த நிலையில் கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீடூரில் மனைவி செந்தாமரை, மகன் மருமகளுடன் இளங்கோவன் என்ற சித்த மருத்துவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், மனைவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இளங்கோவன் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்வாய்ப்பட்ட மனைவி இறந்த சோகத்தில் இளங்கோவன் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
