வெள்ளத்தில் மூழ்கிய சம்பா பயிர்கள்... குமுறும் விவசாயிகள் | mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை சோதனை சாவடி அருகே ஆற்றில் கரை ததும்பி உடைப்பு ஏற்பட்டு நல்லாடை, அரசூர், கொத்தங்குடி, விளாகம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் விவசாய நிலங்களுக்கு வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. 2500-க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ள பயிர்களை எடுத்து காண்பிக்கும் விவசாயிகள் வீட்டில் வைத்திருந்த நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தோம், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, அரசுதான் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story