"மெரினா புரட்சியால் வந்த ஆர்வம்" - சீறிப்பாய தயாராகும் சென்னை காளைகள்

x

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் காளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், சென்னை கொரட்டூரில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இதற்காக பாரம்பரிய நாட்டு இன கன்றுகளை வாங்கி வளர்த்து வந்த இளைஞர்கள், மதுரை மற்றும் மாதவரத்தில் இருந்து காளைகளுக்கான உணவுகளை வாங்கி வருவதாக தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாக அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் பங்கேற்ற நிலையில், மூன்றாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்