மன்சூர் மகன் பின்னால் இவர்களா..! போலீசை திடுக்கிட வைத்த `OG' கேங்... சென்னைக்குள் வந்தது எப்படி..?

x

சில தினங்களுக்கு முன், சென்னை முகப்பேர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆன்லைனில் கஞ்சா வாங்குவதை ஜெ.ஜெ. நகர் போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 5 மாணவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா விற்பனை செய்யும் மொத்த கும்பலையும் பிடிக்க முடிவெடுத்தனர். அதன்பேரில் ஒவ்வொருவராக நூல் பிடித்து, இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர். இந்த 19 பேரில் ஒருவர் தான் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்.

மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டவுடன், இந்த வழக்கின் மீது அனைவரது கவனமும் குவிந்தது. இதன் தொடர்ச்சியாக, ராயப்பேட்டையை சேர்ந்த அசாருதின், அவரது தந்தை நவாஸ் முகமது ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் தான், இந்த ஓ.ஜி. கஞ்சாவை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓ.ஜி.கஞ்சா எப்படி சென்னைக்குள் வருகிறது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலிடம் டார்க் வெப், வி.பி.என் மூலமாக ஓ.ஜி.கஞ்சா ஆர்டர் செய்யப்படுகிறது. ஆர்டருக்கான பணம், கிரிப்டோகரன்சி வாயிலாக செலுத்தப்படுகிறது. பணம் செலுத்திய பின் விமானம், கப்பல் மற்றும் கொரியர் வாயிலாக ஓ.ஜி. கஞ்சாவை அந்த கும்பல் சென்னைக்கு அனுப்பி வைக்கிறது.

அப்படி கொண்டு வரப்பட்ட ஓ.ஜி. கஞ்சாவை, சென்னையில் வாட்ஸ் அப், டெலிகிராம் குரூப் உள்ளிட்ட நெட் வொர்க் அமைத்து கடந்த ஒரு வருடமாக தந்தையும் மகனும் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.1 கிராம் 1500 ரூபாய்க்கு வாங்கி 3000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போதைப்பொருள் வாங்கி நண்பர்களுக்கு விற்பனை செய்திருப்பதால் அவரது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இதையடுத்து, பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை அனுப்பும் போதைக் கடத்தல் கும்பலை பிடிக்க, தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்