மன்சூர் அலிகானை தெருவுக்கு இழுத்து விட்ட மகன்... போலீசையே சூடாக்கிய அந்த வீடியோ - பல டுவிஸ்ட் & ஷாக்

x

மன்சூர் அலிகானை தெருவுக்கு இழுத்து விட்ட மகன்... போலீசையே சூடாக்கிய அந்த வீடியோ - தோண்ட தோண்ட பல டுவிஸ்ட் & ஷாக்

போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் சிக்கியது எப்படி?. போலீஸ் விசாரணையில் வெளியாகி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்களே, போதைப்பொருள் கடத்தலில் சிக்கி கைதான பரபரப்புக்கிடையே, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதைப்பொருள் பயன்படுத்தி கைதானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது...

போதைப்பொருள் விற்றதாக கூறி கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவன் கைதானதில் தொடங்கி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடுத்தடுத்து கைது செய்த போலீசார், அந்த வரிசையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கையும் கைது செய்திருந்தது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது..

இந்நிலையில், அலிகான் துக்ளக் மற்றும் அவரின் நண்பர்கள் 6 பேர் என 10 பேரை டிசம்பர் 18 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்..

இந்த சூழ்நிலையில், மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது..

'ரெடிட்' ஆன்லைன் ஆப் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் பழகிய அலிகான் துக்ளக், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓ.ஜி வகை கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது.

இது அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிற நண்பர்களுக்கும் போதைப்பொருள் வாங்கி கொடுக்க தொடங்கிய அலிகான் துக்ளக், பின்பு அதனை தனது தொழிலாகவே மாற்றி ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.

இதனிடையே, திரைப்பட பாணியில் தான் போதைப்பொருள் உட்கொள்வதை தானே வீடியோ எடுத்து அலிகான் துக்ளக் பதிவு செய்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு அலிகான் துக்ளக் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஜெஜெ நகர் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்