திருவாரூர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபர் - திருநீறு பூசி தூக்கிய அமரர் ஊர்தி ஓட்டுநர்
திருவாரூரில் சுவாமி தரிசனத்திற்கு வந்த நபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த, கள்ளக்குறிச்சியை பாண்டுரங்கன் என்பவர், கோயில் குளத்தில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக எடுத்துச் செல்ல தயார் செய்யப்பட்ட நிலையில், அமரர் ஊர்த்தி ஓட்டுநர் இறந்தவரின் நெற்றியில் திருநீறு பூசி ஏற்றிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது
Next Story
