மலேசியாவில் கணவரை தீர்த்துக்கட்டிய கூட்டாளி.. கண்ணீருடன் கதறும் மனைவி - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

x

மலேசியாவில் வேலைக்குச் சென்று, கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, 2 குழந்தைகளின் தாய், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன், நெய்வேலியைச் சேர்ந்த ஒருவர் மூலமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், அவரை அழைக்க வந்த நபர், அவரிடம் இருந்த பணத்தையும் பாஸ்போர்ட்டையும் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் கூலி வேலை செய்து வந்த பிரபாகரன், விரைவில் ஊருக்கு வருவதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டதாக மனைவி ரஞ்சிதாவுக்கு தகவல் வந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது பிரபாகரன் பணத்தை தராததால் அவரை கொலை செய்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பிரபாகரனின் உடலை மீட்டு வரக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் துறை கண்காணிப்பாளர் அலுலவகத்திலும் 4 நாட்களாக ரஞ்சிதா புகார் கொடுத்து வருகிறார். ஆனால், அவருக்கு எந்த ஒரு பதிலும் வராத நிலையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கண்ணீருடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்