மாமல்லபுரத்தில் திரண்ட 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள்

x

மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் ஒரே நேரத்தில் 70 நாடுகளை சேர்ந்த 250 சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற மாமல்லபுரத்திற்கு வருகை தந்தனர். அங்குள்ள ஐந்து ரதம் பகுதியில் பல்லவர் கால ஒற்றைக்கல் ரதங்களை கண்டு ரசித்து அவர்கள், கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்