மாமல்லபுரத்தில் முதியவர் கொடுத்த அடைக்கலம்...35 ஆண்டுக்கு பின் நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தம்பதி
35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதி, அப்போதைய சுற்றுலா வழிகாட்டியாக இருந்த முதியவரை சந்தித்து, காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். பாரீஸ் நகரை சேர்ந்த ஹென்றி என்பவர் கடந்த 1990- ம் ஆண்டு ஜனவரியில் தனது மனைவி ஜெஸ்லீன் உடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தை சேர்ந்த மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனுவாசன் அவர்களுக்கு 2 நாட்கள் அடைக்கலம் தந்து, எல்லா இடங்களையும் காட்டி விளக்கியுள்ளார். அதோடு, நினைவு பரிசாக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது, ஹென்றி -ஜெஸ்லீன் தம்பதி மாமலல்லபுரம் வந்துள்ளனர். அப்போது எம்.கே.சீனுவாசனை சந்தித்து காலில் விழுந்து தமது நன்றியை தெரிவித்தனர்.
Next Story