இது இருந்தால் ரூ.1000 கிடைக்கும்? -சொன்னதும் வாங்க குவியும் மக்கள்..இதுவரை 1.5 லட்சம் பேர்

x

புதிதாக சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும்

ஆயிரம் ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்துள்ளதாக உணவுப் பொருள்

வழங்கல் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 500 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்து 28 ஆயிரம் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக

தெரிவித்துள்ளது. 6 ஆயிரத்து 640 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் புதிதாக விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைவருக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்