இரவு நேரங்களில் உலா வரும் டவுசர், குரங்கு குல்லா உருவங்கள் - பிடித்த போலீசார்
நாகமலைபுதுகோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக இரவு நேரங்களில் டவுசர் மற்றும் குரங்கு குல்லா அணிந்த 2 பேர் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஈரோட்டை சேர்ந்த சிவா மற்றும் சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story