வெள்ளத்தில் மூழ்கிய மெயின் ஏரியா.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக யானைக்கல் சர்வீஸ் சாலை முழுவதிலும் மழை நீரில் மூழ்கியது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்லும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்குவதை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story