அதிமுக கொடிமரம் வைக்க கோரிய வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

x

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், சித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை விளாங்குடியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார். பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று கூறி, அந்த ம்னுவை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதே இடத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளதாகவும், அதிமுகவிற்கு மட்டும் பாரபட்சமாக அமைக்க மறுக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எதிர் மனுதாரராக தமிழக காவல்துறை தலைவரை சேர்க்க உத்தரவிட்டார். பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் கொடி மரங்கள் வைக்கப்பட்ட இடங்களில் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது என்றும், இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3க்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்