தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியரின் பணியிடை நீக்கம் தொடர்பான வழக்கானது, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நிறைவேற்றாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 550 அவமதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, அரசு அதிகாரிகள் உட்பட அனைவருமே சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான் என எச்சரித்துள்ளார்.
Next Story