வக்புக்கு எதிராக திரண்ட ஜமாத்தினர்... தர்ஹா கோபுரத்தில் ஏறியதால் அதிர்ச்சி... பரபரத்த மதுரை

x

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் வரவு, செலவு கணக்குகளில் முறைகேடு நடைபெறுவதாக வக்பு வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து, பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வக்பு வாரிய அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தை

கையகப்படுத்த முயற்சியை செய்வதாக கூறி பள்ளிவாசல் ஜமாத்தினர் வக்பு வாரிய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தெற்குவாசல் காவல் நிலையத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் வக்பு வாரிய

அதிகாரிகளுக்கு ஆதரவாக தெற்குவாசல் காவல்துறையினர் செயல்படுவதாக கூறியும், வக்பு வாரிய நிர்வாகத்தை கண்டித்தும், தெற்குவாசல் பள்ளிவாசல் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்