மதுரையை பரபரப்பாக்கிய கொடி.. விசிகவினர் மீது வழக்கு பதிவு
மதுரையில் விசிக கொடி கம்ப விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையினரை விசிகவினர் தாக்கியதாக விசிக நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி விசிக கொடி கம்பம் நடப்பட்டதாக ஏற்கனவே சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story