மதுரை திருமங்கலத்தில் வீடு புகுந்து VAO அடித்தே கொலை - பெண் கைது
மதுரை திருமங்கலத்தில், கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரப்பனூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த முத்துப்பாண்டி என்பவர், கொலை செய்யப்பட்ட நிலையில், மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த சமரத்பிவி மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சினை தொடர்பாக முத்துப்பாண்டியை அணுகிய சமரத் பிவி, பிரச்சினையை விரைவாக முடித்து தராததால், ஆத்திரத்தில் வீடு புகுந்து அடித்துக் கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story