கமிஷனுக்காக பெண்களை ஏமாற்றும் பெண் புரோக்கர்கள்..வெளிச்சத்திற்கு வந்த பிளான்.. சிக்க வைத்த தாய்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களைக் குறிவைத்து பணம், நகை மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பெண்களை கைது செய்துள்ளனர்.
பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாயி என்பவர், தனது மகன் முருகனுக்கு, தரகர் மூலம் பெண் தேடியுள்ளார். அந்த வகையில் அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, இரண்டு பெண்களை அழைத்து வந்து ஏமாற்றிய நிலையில், மீண்டும் அருணா தேவி என்ற பெண்ணை அழைத்து வந்து திருமணம் முடித்து வைப்பதாகக் கூறி, தரகர் கமிஷனாக 1 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட பெருமாயி, கையும் களவுமாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இதன்பேரில், நூதன மோசடியில் ஈடுபட்ட விஜயா என்ற ஜெயா, கோவில்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணா தேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் என்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விஜயா, காளீஸ்வரி, அருணா தேவி ஆகிய 3 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்தும், திருமணம் முடிந்த கையோடு பணம் நகையை கொள்ளையடிக்கும் மோசடி கும்பல் கைதான சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.