மதுரை டூ பெங்களூரு கோடைகால சிறப்பு ரயில் இயக்கம் - ரயில்வே
கோடை காலத்தில் பயணிகளின் வசதிக்காக மதுரை - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு - மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஏப்ரல் 30 அன்று இயக்கப்படும் என்றும், இந்த ரயில் இரவு 7.00 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறு மார்க்கத்தில், மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் மே 1ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
Next Story
