"ரூ.125 கோடி.." ஓனர் நடுரோட்டில் ... காத்திருந்து சங்கறுத்த நபர்... அதிர்ச்சியில் 60 குடும்பங்கள்

x

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மோகன்ராஜ் என்பவர், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சார்ஜ் ஸ்டேசன்கள் உள்ள நிலையில், அதனை சாப்ட்வேர் மூலம் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்டுகளை கண்காணிக்க கூடிய அதிகாரியாகவும், துறைத் தலைவராகவும் மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சிவா, சில தினங்களுக்கு முன்பாக நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 லட்சம் மதிப்பிலான சாப்ட்வேர்கள் மற்றும் பாஸ்வேர்ட்டை திருடிச் சென்று விட்டதாக கூறி மோகன்ராஜ் போலீசில் புகாரளித்துள்ளார். தாங்களே சாப்ட்வேர் உருவாக்கி அதற்கான காப்புரிமை சான்றும் பெற்றிருந்த நிலையில், அதனை இளைஞர் திருடிவிட்டதால் இந்தியா முழுவதும் உள்ள தங்களது வாடிக்கையாளர்களின் தொழில் முடங்கும் என கூறி மோகன் ராஜா புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்