மதுரை திருப்பரங்குன்ற முருகன் கோயில் அருகே இப்படி ஒரு அதிர்ச்சி காட்சி...இதுவரை கேள்விபடா சம்பவம்

x

மதுபோதையில் திரிந்த குட்டி குரங்கை மீட்டு பராமரித்த சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில்தான், குரங்கு ஒன்று மூக்கு முட்ட மதுவைக் குடித்து விட்டு தள்ளாடியபடி உலா வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. போதையில் நச்சரித்த குரங்கின் மீது அங்கிருந்த கடை வியாபாரிகள் சிலர், தண்ணீரை ஊற்றி விரட்டிய போது, சமூக ஆர்வலரும், பாம்பு பிடி வீரருமான ஸ்நேக் பாபு குரங்கை மீட்டு பாதுகாத்துள்ளார்.

குரங்குக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டு, இரக்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஒருவரின் உதவியோடு, மதுபோதையில் தள்ளாடிய குரங்கு குட்டி மீட்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மதுரையின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.

இங்கு முருகனை தரிசிப்பதற்காக தினமும், ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இப்படி, தினமும் பக்தர்களின் கூட்ட நெரிசலோடு காணப்படும் சன்னதி தெருவில் குட்டி குரங்கு ஒன்று மதுவை குடித்ததாக தெரிகிறது.

மதுவைக் குடித்த மனிதனே குரங்காகும் போது, அந்த குரங்கே மதுவைக் குடித்தால் என்னவாகும் என சொல்லவா வேண்டும்.. தலைக்கேறிய போதையில், செய்வதறியாமல் பலரிடமும் போய் அட்ராசிட்டி செய்து வந்த இந்த குரங்கின் செயல் அங்கிருந்த பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த கடை வியாபாரிகள் சிலர் குட்டி குரங்கின் மீது தண்ணீர் ஊற்றி அடித்து துரத்தியுள்ளனர். இதனால், தலைக்கேறிய போதை ஒருபக்கம், நடுங்க வைக்கும் குளிர் மறுபக்கம் என தவித்தக் கொண்டு இருந்த குரங்கைக் கண்ட ராதிகா என்பவர் இரக்கப்பட்டு பாம்பு பிடி வீரரும், சமூக ஆர்வலருமான ஸ்நேக் பாபுவிற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ஸ்நேக் பாபு சமப்வ இடத்திற்கு வந்து குரங்கை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு போயிருக்கிறார்.

அங்கு, டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, ஈராமாகி இருந்த குரங்கை துவட்டி விட்டதோடு, குரங்கு குட்டிக்கு போதை தெளிவதற்கான மருந்தை அளித்தும் உள்ளார். மருந்து அளித்து 4 மணி நேரத்தில் குரங்கிற்கு போதை தெளிந்த நிலையில், குட்டி குரங்கை, ஸ்நேக் பாபு வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக விரோதிகள் யாரும் குரங்கிற்கு வேண்டும் என்றே, மதுவை எளிதில் குடிக்கும் வகையில் அளித்தனரா? அல்லது யாராவது வீசியெறிந்த காலி மது பாட்டிலில் மிஞ்சி இருந்த மதுவை குடித்ததா? என்பது தெரியவில்லை.

மதுவில் தள்ளாடிய செயல் ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் ஒருபுறம் வேதனையாக இருந்ததாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்