கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா.. மதுரை உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு | Madurai
இது தொடர்பாக நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அப்போது பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீரை சுமந்து வந்து வாசனை திருவியங்கள் மற்றும் வேதி பொருட்களை தண்ணீரில் கலந்து குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி அடித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம் என்று தெரிவித்துள்ளார். இதனால் கள்ளழகரின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள், சுவாமியின் தங்கக்குதிரை வாகனம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு வரும் செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்படும் எனக்கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.