நீரில் மூழ்கி 80 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள் | Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 80 ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story