தப்பை தட்டிக் கேட்ட இளைஞரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர்கள்.. மதுரையில் பரபரப்பு

x

வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஞானசேகரன், அப்பகுதியில் விதிமீறி இயங்கி வரும் கல்குவாரிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பதில் பெற்றுள்ளார். அதனால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகள், கால்நடைகளை மேய்க்க முடியாத நிலை, வெடி வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து , குவாரிகளின் உரிமம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமையன்பட்டி ஆனந்தசிவா என்பவரது குவாரியில் பணியாற்றும் முருகன் என்பவர், ஞானசேகரனை இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஞானசேகரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஞானசேகரன் அளித்த புகாரில் முருகன் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர்கள் பின்புலத்தில்தான் குவாரி செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டிய இளைஞர், ஊருக்கு நல்லது நினைப்பவர்களுக்கு எல்லாம் இதுதான் நடக்கும் என வேதனை தெரிவித்தார். இதற்கிடையே விசாரணையில் இளைஞரை தாக்கிய முருகனை வாடிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்