இனி 24 மணி நேரமும் விமான சேவை! இனி நள்ளிரவிலும் ஜாலியா பறக்கலாம் | Madurai

x

மதுரை விமான நிலையத்தில் முதன்முறையாக இரவு நேர விமான சேவை தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக மதுரையில் இருந்து சென்னைக்கு இரவு 10:45 மணிக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கியுள்ளது. பின்னர் சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கு நகருக்கு அந்நாட்டின் நேரப்படி காலை 8.30 மணிக்கு செல்ல உள்ளது. இரவுநேர விமான சேவைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், விரைவில் அரபு நாடுகளுக்கு இரவுநேர சேவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்