நாயின் கால் மீது ஏறிய பஸ்.. - ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்..

x

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த நாய் மீது பேருந்து மோதியதில், நாயின் காலில் காயம் ஏற்பட்டு துடிதுடித்தது. இதை கண்டுகொள்ளாமலும், உரிய சிகிச்சை அளிக்காமலும், அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை இயக்கிச் சென்றுவிட்டதாக காசி விஸ்வநாதன் என்பவர் போக்குவரத்துத்துறை மதுரை மண்டல பொது மேலாளருக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்தார், இதன் பேரில் செக்காணூரணி பணிமனையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் நமச்சிவாயத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல பொது மேலாளர் மணி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்