அதிகாரிகள் அலட்சியத்தால்..! அமைச்சர் தொகுதியில் நடக்கும் அவலம்
மதுரை அருகே மேம்பாலத்தில் ஏறி குதித்து சடலத்தை சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்வதற்காக ஓடையில் மேல்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 3 அடி உயரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை இணைக்கும் பாதையை அமைக்காமல் அப்படியே பணி முடிந்ததாக கூறி அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊர்மக்கள் கேட்டதற்கு பாலத்திற்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டதாகவும், சாலைக்கு தரவில்லை என அதிகாரிகள் அலட்சியமாக கூறியதாக மக்கள் குமுறினர். இந்த சூழலில், மீனாட்சிபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்ததால், அவரது சடலத்தை 3 அடி உயர பாலத்தில் ஏறி குதித்து உறவினர்கள் தூக்கிச்சென்றனர். அமைச்சர் மூர்த்தியின் தொகுதியிலேயே இந்த அவலம் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.