7 ஊர் அம்மன் திருவிழா.... அலைகடலென திரண்ட பக்தர்கள் | madurai
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், 7 ஊர் அம்மன் திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. 6 கிராமங்களில் இருந்து 40 அடி உயரமுள்ள, வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களை தலைச்சுமையாக கிராம மக்கள் சுமந்து, தாய் கிராமமாக உள்ள அம்மாபட்டிக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அம்மாபட்டியில் அம்மனாக வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மனை சப்பரங்களில் வைத்து ஏழு ஊர் கிராம மக்கள் சுமந்து சென்றனர். பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை தந்ததையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story