மதுரையில் 60 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை இடிக்க உத்தரவு - கண்ணீர் வடிக்கும் பெண்கள்
மதுரை முல்லைநகரில் நீதிமன்ற உத்தரவுபடி வீடுகளை இடிக்க உள்ளதால்,பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.பி.குளம் கண்மாயை ஒட்டியுள்ள பகுதியான முல்லை நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு என கூறி, நீர்வளத்துறை சார்பில் இடிப்பதற்காக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிடுவதற்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை திடீரென காலி செய்ய வைத்தால் எங்கு செல்வது என்று பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
Next Story