அரசு மருத்துவமனை கட்டடம் உறுதி? - மதுரை ஹைகோர்ட் அதிரடி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, டீன் அடங்கிய குழுவுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் ஒரு கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்தது. இந்த விவகாரம் குறித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது. அதைத் தொடர்ந்து, திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் சிவில் துறைத் தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் அடங்கிய குழு, மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Next Story