முதலிடம் பிடித்த சசிகலாவின் காளை - சீறிய 19 காளைகளை அடக்கி காரை பரிசாக பெற்ற கார்த்தி

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, ஆயிரத்து 735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 900 வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. 629 பேர் களத்திற்கு வந்ததில் மருத்துவ பரிசோதனைக்குப் பின் 600 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 29 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 500 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்றனர்.

போட்டிக்கு வந்த 895 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 836 காளைகள் மட்டுமே களம் கண்டன. காலை 6.30 மணிக்கு தொடங்கி, 12 சுற்றுகளாக நடைபெற்ற போட்டி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 2-ஆம் இடத்தை பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்