கட்சி கூட்டத்தில் கொடுத்த பிரியாணி பார்சல்.. ஆசையாய் பிள்ளைகளுக்கு கொடுத்த மறுநொடி நடந்த விபரீதம்
கள்ளிக்குடி அருகே வில்லூரில் தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிளாஸ்டிக் டப்பாவில் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீட்டிற்கு கொண்டு சென்று தங்களது பிள்ளைகளுக்கும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கள்ளிக்குடி, வில்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, வில்லூர் மற்றும் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் மட்டும் சிறுவர்கள் 10 பேர் உட்பட 38 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதல்நாள் இரவே பிரியாணியை தயாரித்து டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டதால் பிரியாணி கெட்டிருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.