மாணவர்கள் கவனத்திற்கு... ஜன.25, 26ம் தேதிகளில்.. Fellow Citizen அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பு
தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்தும் Fellow Citizen தொண்டு நிறுவனத்தின் மூலம், ஆற்றுப்படை என்ற அறக்கட்டளை நிறுவனத்திற்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளை போலவே நான்காவது ஆண்டாக, அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2 நாள் இலவச நீட் பயிற்சி முகாம், மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா கல்லூரியில், ஜனவரி 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீட் வகுப்புகள் நடைபெறவுள்ளன. வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேநீர், மதிய உணவு மற்றும் குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
Next Story