இறுதி ஊர்வலம்... பொது தெருக்களில் செல்ல தடை கோரிய நபர்... நீதிமன்றம் சம்மட்டி அடி தீர்ப்பு
இறுதி ஊர்வலத்தின் போது, தெருக்களை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தாத வகையில், பிரதான சாலையை பயன்படுத்தி சுடுகாட்டிற்கு செல்ல உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தலாம் என்றும் அதில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் என எவ்வித உரிமையும் இருக்க முடியாது என்று கூறியது. வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
Next Story