ஜல்லிக்கட்டை அப்படியே கண் முன் காட்டிய சிறுவர்கள் - தத்ரூப காட்சிகள்

x

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, அப்பகுதி சிறுவர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை போன்று மாறி போட்டியை நடத்தினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் வரும் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காளைகள் வாடிவாசல் வழியாக வரும் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி, ஜல்லிக்கட்டு போட்டியின் போது எப்படி காளைகள் வாடிவாசல் பகுதிக்கு வருமோ அதே போன்று சிறுவர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை போன்று தத்ரூபமாக நடித்து காட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்