``வாயில் வைத்தவுடன் `ஜிலீர்'...'' தலைமுறையையே அழிக்கும் எமன் - கொதித்தெழுந்த நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

x

பள்ளி மாணவர்கள் முதல் பலரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கூல் லிப் போதைப்பொருள் வருங்கால தலைமுறைக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நீதிமன்றமே இந்த கூல் லிப் குறித்து கவலை தெரிவித்திருக்கும் சூழலில் இதன் அபாயத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தலகாணி, பொருள், பூஸ்ட் என பல பெயர்கள் கூல் லிப்பிற்கு...

வாயில் வைத்தவுடன் ஜீலிர் என்று இருக்குமாம்... ஆனால் பெயர் தலகாணி என்கிறார் ஒருவர்..

உதட்டின் உள்பக்கம் வைத்த உடனே கிறுகிறு என இருக்கும் என்கிறார் மற்றொருவர்...

எந்த விதமான வாசனையும் வராததால் யாருக்கும் இதனை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் மற்றொருவர்...

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.. அது என்ன தலகாணி ?

தலகாணி, பொருள், பூஸ்ட் என பல்வேறு சீக்ரெட் பெயர்களில் அழைக்கப்படும் இந்த பொருள் தான் கூல் லிப்...

வடிகட்டப்பட்ட புகையிலை என சொல்லி விற்கப்படும் கூல் லிப்...

வடிகட்டப்பட்ட புகையிலை என்று சொல்லி விற்கப்படும் கூல் லிப்பின் எம்ஆர்பி விலையில் இருந்து மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதில் இருந்தே அது எவ்வளவு வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கிறது என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தொடங்கி வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை உதட்டின் உள் பக்கமாக வைத்து ஒதுக்கிக் கொள்கின்றனர்.

முதல் முறை இதனைப் பயன்படுத்துவர்களுக்கு கடுமையான தலைவலியில் தொடங்கும் பிரச்சினை.. நாட்கள் செல்ல செல்ல எப்போதும் மிதப்பில் இருப்பது போலவே வைத்திருக்கும்.

ஒரு கட்டத்தில் இது இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைக்குக் கொண்டு சென்று கடைசியில் அவர்களை அடிமையாக்கிவிடும் கூல் லிப்...

பெட்டிக்கடை டூ ஆன்லைன் வரை அமோக விற்பனையில் கூல் லிப்...

தமிழ்நாட்டில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் புகையிலை தொடர்பான அனைத்து போதை தரும் பொருட்கள் தடை செய்துள்ளது. இருந்த போதிலும் கள்ளச்சந்தையில் சர்வசாதாரணமாக கூல் லிப் கிடைக்கிறது என்கின்றனர் இதன் வாடிக்கையாளர்கள்... சாதாரண பெட்டிக்கடை தொடங்கி ஆன்லைன் தளங்கள் வரை எளிதாக கிடைக்கிறது இந்த கூல் லிப்...

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது ஏன் கூல் லிப்பை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி பரதசக்கரவர்த்தி பள்ளி மாணவர்களே கூல் லிப்பிற்கு அடிமையாகும் அவலம்

பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகி இருப்பதும், இதனால் இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்து இருக்கிறார். மேலும் சமீபகாலமாக மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களுக்கு இது தான் காரணம் எனவும் வேதனை தெரிவித்து இருக்கிறார்.

இந்த போதைப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்தே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதாகவும் கூறிய நீதிபதி, தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் கூல் லிப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகத் தெரிகிறது என்றும், ஏன் இந்தியா முழுவதும் இதனைத் தடை செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்... இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்