2 கிலோ தங்கம் கொள்ளை.. 5 பேர் கைது, நகைகள் மீட்பு - மதுரையில் அதிர்ச்சி

x

2 கிலோ தங்கம் கொள்ளை.. 5 பேர் கைது, நகைகள் மீட்பு - மதுரையில் அதிர்ச்சி

மதுரையில் இரண்டு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மீட்கப்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன், கடந்த 23ம் தேதி சென்னையில் 2 கிலோ தங்கத்தை வாங்கி, விற்பனை செய்வதற்காக மதுரை வந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று தங்கத்தை பறித்துள்ளது. கிடாரிப்பட்டி பகுதியில் அவரை இறக்கிவிட்டு தப்பிய நிலையில், புகாரின் பேரில், திலகர்திடல் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியன் சென்னையில் அடிக்கடி நகை வாங்கி வந்ததும், இதனை நோட்டமிட்டு நாகேந்திரன் தூண்டுதலின் பெயரில் நகை பறிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக முதலில் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின்பேரில் மூளையாக செயல்பட்ட நாகேந்திரன் உட்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ தங்கம், கார், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்