"தேர்தலுக்காக ஆள் இல்லா மலை ஏறி..." - மதுரையில் நடந்த சுவாரஸ்யம்

x

மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை அடையாளமாக உள்ள 400 மீட்டர் உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து மாவட்டத் தேர்தல் அலுவலர் சங்கீதா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 300-க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் செய்து, 100 அடி நீளமுள்ள பதாகைகளை ஏந்தியவாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை பாத்திமா மைக்கேல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் I VOTE FOR SURE என்ற வாசக வடிவில் நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

G-VIGIL மொபைல் செயலி குறித்து மதுரை சோலைமலை கல்லூரி மாணவிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்