"ரேர் பீஸ்... மிஸ் பண்ணிடாதீங்க" - ஒரு சொம்பு ரூ.10 லட்சமா!

x

தேனியைச் சேர்ந்த குமார் என்பவரின் பேச்சை நம்பி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஜஸ்டின் ஜெயக்குமார் தனது நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் நின்றிருந்த குமாரை சந்தித்து 9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இரிடியம் வாங்கி வருவதாக சென்ற குமார் சிறிது நேரத்தில் ஒரு பெட்டியுடன் வந்துள்ளார்.

பெட்டியுடன் மதுரைக்கு வாருங்கள், அங்கு இதை விற்பனை செய்து தருகிறேன் என்று ராஜேஷ் என்பவ்ர் கூறியதை தொடர்ந்து மதுரையை நோக்கி புறப்பட்டனர். அவர்களை வழியில் போலீசார் தடுத்து சோதனை

செய்த போது, பின்னால் இரண்டு கார்களில் வந்த குமார் மற்றும் ராஜேஷ் தப்பி ஓடிவிட்டனர். அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ஒரு செம்பு இருந்தது. அந்த செம்பை சோதனை செய்த

போது அது சாதாரண பித்தளை செம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்