மதுரை கலெக்டர் ஆபிஸில் திடீர் பரபரப்பு

x

*மதுரை மாவட்டம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு ST இந்து காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்ககோரி 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 நாட்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

*இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சாதி சான்றிதழ் தொடர்பாக குழு அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இதுவரை சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மீண்டும் மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த இந்து காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்

*சாதிசான்றிதழ் இல்லாத நிலையில் தங்களது பிள்ளைகள் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளதாகவும், ஆனால் அரசு அதற்கான நடவடிக்கைகளை தொடங்கவில்லை என சத்யமூர்த்திநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்