மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு | Madurai | Farmers
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்தின் சார்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர், அரிட்டாபட்டி, அழகர் கோயில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர், தங்கள் கோரிக்கையை கிராமசபை கூட்டம் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி அதனை அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஆலை அமையாது என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Next Story