"மதுரை ஆட்சியரை பார்க்க லுங்கி அணிந்து வரக்கூடாதா?" - மக்கள் கேள்வி

x
  • மதுரை மாவட்ட ஆட்சியரை பார்க்க வரும்போது லுங்கி அணிந்தபடி வரக்கூடாது என காவல்துறையினர் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள், காவல்துறை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஆட்சியரை காண வரும்போது வேட்டி மட்டுமே அணிந்துவர வேண்டும் என்று போலீசார் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பணிக்குச் செல்லும் வழியில் மனு அளிக்க வரும்போது, லுங்கி அணிந்து வரக்கூடாது என கூறுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்